நாச்சியார்கோவிலில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்


நாச்சியார்கோவிலில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2021 2:11 AM IST (Updated: 19 Feb 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவில் அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவிடைமருதூர்:-
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story