நிதி நிறுவனத்தில் ரூ.99 லட்சம் மோசடி செய்த வழக்கு; 11 பேருக்கு 1 நாள் சிறை தண்டனை
நிதி நிறுவனத்தில் ரூ.99 லட்சம் மோசடி செய்த வழக்கில் 11 பேருக்கு 1 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் "சுப்பலட்சுமி பைனான்ஸ்"என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 100-க்கும் மேலான வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.99 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் (வயது60), கிருஷ்ணன் (54), பால்ராஜ் (39), கோபாலகிருஷ் ணன் (58), பாலகணேசன் (56), ருக்மணி (52), பாலஜெயகுமாரி (59), சசிகுமார் (339, பாலவனஜா குமாரி (55), சுப்பலட்சுமி (55), பாண்டுரங்கன் (73) ஆகிய 11 பேருக்கும் கோர்ட்டு கலையும் வரை ஒருநாள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதன்படி கோர்ட்டு கலையும் வரை இருந்த அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story