திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார். இதில் முன்னோடி வங்கி பொதுமேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பேசினர். இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். மேலும், சுயதொழில் தொடங்கவும், வங்கிகள் மூலம் கடன் உதவி பெறவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதுபோல் 40 மாற்றுத்திறனாளிகளை திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்பட்டது. முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாகராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story