ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தினர், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தம்பிகலையான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.
ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமன தடையை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story