பல்லடம் தோட்டங்களில் தண்ணீர் புகுந்து வெங்காய பயிர் சேதம்
பல்லடம் தோட்டங்களில் தண்ணீர் புகுந்து வெங்காய பயிர் சேதம்
பல்லடம்:-
பல்லடம் அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாய்க்காலின் கரை பலவீனமாக இருந்ததால் கரை உடைந்து அதன் வழியே தண்ணீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் 5 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயம், தென்னை, வாழையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறியதாவது:-
பி.ஏ.பி வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து, சிதிலமடைந்து உள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது அருகே உள்ள தோட்டங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பி.ஏ.பி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீரின் அளவை குறைத்து, விட்டால் கூட இந்த பிரச்சினை இருக்காது. தற்போது தண்ணீர் புகுந்ததால் பயிரிடப்பட்ட வெங்காயம் மற்றும் வாழை கன்றுகள் அழுகி வீணாகிறது. எனவே வாய்க்காலில் வரும் தண்ணீரின் அளவை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பகுதிகளை பராமரித்து தண்ணீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story