போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து பேசிய காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர்


போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து பேசிய காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 19 Feb 2021 3:01 AM IST (Updated: 19 Feb 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர், 

காட்டுமன்னார்கோவில் அருகே சிதம்பரம்-திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க, இடம் கையகப்படுத்துவதற்காக வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரனை, காட்டுமன்னார்கோவில் போலீசார் தாக்கி, கைது செய்தனர்.
இதனால் நேற்று முன்தினம் போலீசாரை கண்டித்து, விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி, நேற்று வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்படி பணியாற்ற முடியும்

அந்த ஆடியோ பதிவில் பேசியவர், தன்னை காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர், எந்தவொரு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தனிப்பிரிவு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் உத்தரவிடுவார்கள். ஆனால் இன்று காட்டுமன்னார்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை கண்டித்து, 3 மணி நேரம் போராட்டம் நடந்துள்ளது.
போராட்டத்தின் போது போலீசார் குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர். ஆனால் இதுவரை அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிய கோரி தனிப்பிரிவு போலீசாரோ அல்லது உயர் அதிகாரிகளோ உத்தரவிடவில்லை. இதுபோன்று செயல்பட்டால் எப்படி, காவல்துறையில் பணியாற்ற முடியும். பிற துறைகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், அந்த துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.

பரபரப்பு

தற்போது நடந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டருக்கு தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?, சொந்த பிரச்சினை தான் உள்ளதா?, ஒரு பொது பிரச்சினைக்காக சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததற்கு காவல் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், உதாரணமாக தனிப்பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் காவல்துறையில் உள்ள ரகசியங்களையும், நடைமுறைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசியுள்ளனர். அவர்களது போராட்டததிற்கு எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் தடை விதிக்கவில்லை. இவ்வாறு செயல்பட்டால் காவல்துறையில் எப்படி தொடர்ந்து பணியாற்ற முடியும். இது மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது.
இன்ஸ்பெக்டர் ஒருவர் உயர் அதிகாரிகளையும், சக அதிகாரிகளையும் விமர்சித்து பேசி, ஆடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story