குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
கோபி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்
கோபி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
கோபியை அடுத்த தட்டாம்புதூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது40). கட்டிட தொழிலாளி. அவருடைய மகள் கவுரி (19). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகி்ச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
நேற்று முன்தினம் காலை கவுரியின் தந்தை வேலைக்கு சென்றுவிட்டார். கவுரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் குளிர்பானத்தில் சாணிப்பவுடர் மற்றும் மாத்திரைகளை கலந்து குடித்துள்ளார்.
இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story