தர்மபுரியில் ஆய்வக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் ஆய்வக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி:
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் ஆய்வக பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மைக்கேல் பாபு தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகள் செந்தில், சக்திவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கோஷம்
ஆய்வக நுட்பனர் நிலை -2 பணியிடங்களை காலமுறை ஊதிய பணியிடங்களாக அறிவிக்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 6 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் 8 ஆய்வக நுட்பனர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும். ஆய்வக நுட்பனர் நிலை-2 காலிபணியிடங்கள் அனைத்தையும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஆய்வக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story