நல்லம்பள்ளி அருகே, பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மர்ம சாவு


நல்லம்பள்ளி அருகே, பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 19 Feb 2021 10:59 AM IST (Updated: 19 Feb 2021 10:59 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்துள்ளது.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் ெபண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதையடுத்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பச்சிளம் பெண் குழந்தை
நல்லம்பள்ளி அருகே நூலஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அந்தேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது 32), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாலம்மாள் (24). இந்த தம்பதிகளுக்கு மோனிஷா (6), சவித்தாஸ்ரீ (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளன. 
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த சாலம்மாளுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு, தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.  பிறந்த குழந்தையை தனது கணவர் வீட்டில் சாலம்மாள் பராமரித்து வந்த நிலையில், நேற்று திடீரென  அந்த ெபண் குழந்ைத மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. 
போலீசார் விசாரணை
இதுகுறித்து நூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரை தொடர்ந்து, அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கு இறந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் பச்சிளம் பெண் குழந்தை இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிறந்து 28 நாட்களே ஆன நிலையில் பச்சிளம் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story