வேப்பனப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து
வேப்பனப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோழிப்பண்ணை
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
30 ஆயிரம் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் பண்ணையில் உள்ள முட்புதர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
மேலும் தீ அங்குள்ள வயல் வெளியிலும் பரவியது. இதையடுத்து அங்குள்ள பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
2 ஏக்கர்
மேலும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் 2 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த புற்கள் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story