சூளகிரி அருகே ஏரிக்குள் கன்டெய்னர் லாரி பாய்ந்தது


சூளகிரி அருகே  ஏரிக்குள் கன்டெய்னர் லாரி பாய்ந்தது
x
தினத்தந்தி 19 Feb 2021 11:27 AM IST (Updated: 19 Feb 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே ஏரிக்குள் கன்டெய்னர் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளானது.

சூளகிரி:
சூளகிரி அருகே ஏரிக்குள் கன்டெய்னர் லாரி புகுந்தது.
லாரி புகுந்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி சென்றது. வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி என்ற பகுதியில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஏரியில் கன்டெய்னர் லாரி பாய்ந்தது. 
இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
பின்னர், கன்டெய்னர் லாரி, ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

Next Story