ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா


ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில்  எருது விடும் விழா
x
தினத்தந்தி 19 Feb 2021 11:31 AM IST (Updated: 19 Feb 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

ராயக்கோட்டை:
ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது.
எருது விடும் விழா
கெலமங்கலம் ஒன்றியம் பிதிரெட்டி ஊராட்சி ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்தது. இதில் தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஒசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, ராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு எருதின் கொம்புகளில் தடுக்கை கட்டி விரட்டினார்கள். 
10 பேர் காயம்
மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு எருதுகளின் கொம்புகளில் கட்டி இருந்த தடுக்கை பிடுங்க முயற்சி செய்தனர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையொட்டி கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story