தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்


தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 19 Feb 2021 6:32 PM IST (Updated: 19 Feb 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், அப்பாத்துரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், மாரியப்பன், சீனிவாசன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரத்தில் கியாஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தேரடி திடல் முன்பு நடந்தது. ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் விறகு அடுப்புக்கு மாற வேண்டி உள்ளதை உணர்த்தும் வகையில் அவற்றை வைத்திருந்தனர். ஒன்றிய மாதர் சங்க செயலாளர் கலைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், மொட்டையசாமி, தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story