கழுகுமலையில் விவசாய சங்க ஆலோசனை கூட்டம்


கழுகுமலையில்  விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 8:51 PM IST (Updated: 19 Feb 2021 8:51 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் விவசாய சங்க தாலுகா குழு ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கழுகுமலை:
கழுகுமலையில் விவசாய சங்க தாலுகா குழு ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். லெனின் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டி தாலுகா செயலாளர் சிவராமன், கெச்சிலாபுரம் செயலாளர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உதவி செயலாளர் கருப்பசாமி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story