கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து


கவிழ்ந்ததில் சேதமடைந்த கார்.
x
கவிழ்ந்ததில் சேதமடைந்த கார்.
தினத்தந்தி 19 Feb 2021 9:28 PM IST (Updated: 19 Feb 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு கல்லட்டி மலைப்பாதை வழியாக சொந்த ஊர் திரும்பினர்.

ஊட்டி,

ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு வெளிமாவட்ட,மாநில வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு கல்லட்டி மலைப்பாதை வழியாக சொந்த ஊர் திரும்பினர்.  

28-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. 4 பேருக்கு காயம் ஏற்படவில்லை. விபத்தில் கார் சேதமடைந்தது. 

படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில,மாவட்ட வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை 4 விபத்துகள் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story