கைதான 2 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது


கைதான 2 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது
x
தினத்தந்தி 19 Feb 2021 9:34 PM IST (Updated: 19 Feb 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானையை தீ வைத்து கொன்ற வழக்கு: கைதான 2 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் அருகே மசினகுடியில் கடந்த மாதம் 22-ந் தேதி காட்டு யானைக்கு சிலர் தீ வைத்து கொடுமைபடுத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த யானை உயிரிழந்தது.  இது குறித்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாவனல்லாவை சேர்ந்த ரேமண்ட் டீன் (வயது 31), மசினகுடியை சேர்ந்த பிரசாத் (36) ஆகிய 2 பேரை கைது செய்து கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் 2 பேரையும் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 

அவர்களை வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு பாபு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், ரேமண்ட் டீன், பிரசாத் ஆகியோரை சிறையில் அடைத்தனர். 

Next Story