சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்த பூபாலன் தலைைம தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக உத்தரவிட வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.