40 பேருக்கு கொரோனா தடுப்பூசி


40 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Feb 2021 10:08 PM IST (Updated: 19 Feb 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ வாகனம் ஆகியவை மூலம் 2 நாட்களில் 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

திருப்புவனம்,

திருப்புவனம் பக்கமுள்ள பூவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருப்புவனம் அரசு மருத்துவமனை நடமாடும் மருத்துவ வாகனம் மூலமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.கடந்த 2 நாட்களாக காவல்துறையை சேர்ந்த 12 பேருக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் 26 பேருக்கும், டாக்டர்கள் 2 பேர் என மொத்தம் 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சேதுராமு தலைமையிலும் நடமாடும் மருத்துவ வாகனம் குழு டாக்டர். சங்கரலிங்கம் முன்னிலையிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story