பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
ராமேசுவரம்,
தொடர்ந்து விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து சைக்கிளில் கயிறு கட்டி இருசக்கர வாகனத்தை இழுத்துச்செல்வது போன்றும் பெட்ரோல், டீசல், கியாசுக்கு கண்ணீர் அஞ்சலி என்று எழுதி நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட குழு உறுப்பினர் ஜஸ்டின் மற்றும் தாலுகா குழு நிர்வாகிகள் கருணாமூர்த்தி, மணிகண்டன், ராமச்சந்திரபாபு, வெங்கடேசுவரி, ஆரோக்கிய நிர்மலா, அசோக், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story