வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் நடவடிக்கை
வேலூர்
சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேலூர் மாநகருக்கு வரும் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி விபத்து நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் 100 இடங்களில் வைக்கப்பட உள்ளன.
மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர்த்து விபத்து நடைபெறும் இடங்களில் ஒளிரும் விளக்குகளும் வைக்கப்பட உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் இப்பணிகளை ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ள காவல்துறை சார்பில் மாநகராட்சியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களில் காவல்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story