குழந்தையின் உணவுக்குழாயில் ஊக்கு சிக்கியது
மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் நித்திஷை சேர்த்தனர்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் தெக்கலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய ஒரு வயது குழந்தை நித்தீஷ் கடந்த சில நாட்களாக மூச்சு விடமுடிய வில்லை. இதனால் எந்தநேரமும் அழுதுகொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நித்திஷை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை யில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் நித்திஷை சேர்த்தனர்.
அங்கு சி.டி.ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நித்திஷின் உணவு குழாயில் ஊக்கு சிக்கியிருப்பது தெரியவந்தது.
அந்த, ஊக்கு திறந்த நிலையில் உணவுக்குழாயில் குத்தியபடி இருந்ததால் என்டோஸ்கோபி சிகிச்சை முறையில் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து மயக்க மருந்து நிபுணர் டாக்டர் மணிமொழி, செல்வன் ஆகியோர் குழந்தைக்கு மயக்கமருந்து செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து குடல், இரைப்பை துறை டாக்டர் அருள்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் என்டோஸ்கோபி சிகிச்சை மூலம் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.
Related Tags :
Next Story