உயிருக்கு போராடிய 100 கிலோ எடை ஆலிவ் ரெட்லி ஆமை
கோடியக்கரை கடற்கரையில் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய 100 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு கடலில் விட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரைக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று நடுக்கடலில் இருந்து 100 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரெட்லி ஆமை கோடியக்கரை கடற்கரைக்கு முட்டையிட வந்துள்ளது. அப்போது கடற்கரையில் இருந்த சேற்றில் சிக்கி அந்த ஆமை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆமையை சேற்றில் இருந்து மீட்டு பிளாஸ்டிக் மிதவையில் வைத்து சிறிது தூரம் கடலில் கொண்டு சென்று விட்டனர். ஆனால் மீண்டும் அந்த ஆமை கடற்கரைக்கு வந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் அந்த ஆமையை ஒரு படகில் ஏற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று கடலில் விட்டனர். இதையடுத்து ஆமை நீந்தி சென்று விட்டது.
Related Tags :
Next Story