குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்கம்


குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2021 11:37 PM IST (Updated: 19 Feb 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

வடகுடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடந்தது.

காரைக்குடி,

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வடகுடி ஊராட்சி பகுதியில் குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திருப்பதி ராஜா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், வடகுடி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story