வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:32 AM IST (Updated: 20 Feb 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். 
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் மாநில செயலாளர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ராமதாஸ், அனைத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அகவிலைப்படி
ஆர்ப்பாட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு, பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து துறை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 
காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பதவி உயர்வினை உத்தரவாதம் செய்து உடன் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story