பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் நேற்று திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேரும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 371 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story