பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 2 பேரிடம் செல்போன் அபேஸ்


பாளையங்கோட்டையில்  கல்லூரி மாணவிகள் 2 பேரிடம் செல்போன் அபேஸ்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:43 AM IST (Updated: 20 Feb 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 2 பேரிடம் செல்போன் அபேஸ் செய்யப்பட்டது.

நெல்லை:

தென்காசியை சேர்ந்த சுந்தரராஜ் மகள் சாந்தி (வயது 19). செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகள் சக்திமாரி (22). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

இவர்கள் தினமும் செங்கோட்டை, தென்காசி பகுதியில் இருந்து அரசு பஸ்சில் பாளையங்கோட்டை கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கல்லூரிக்கு வந்த இருவரும் பின்னர் ஊருக்கு செல்வதற்காக பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தனர்.

அப்போது மாணவிகள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. 

இதுகுறித்து அவர்கள் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story