வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 17-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 87 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதோடு, பணிகளும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story