முத்தூர் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
முத்தூர் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்
முத்தூர்:
முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு கிராமம், பாலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ஜி.தனபால் (வயது 39). விவசாயி. கடந்த வாரம் தனது தோட்டத்தில் விளைந்திருந்த நெற்பயிர்களில் இருந்து நெல் மணிகளை அறுவடை செய்தார். பின்னர் தனது தோட்டத்து வீட்டின் அருகில் ஒரு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்கள்களின் வைக்கோல்களை கட்டுகளாக கட்டி அடுக்கி வைத்திருந்தார்.இந்த நிலையில் நேற்றுகாலை வைக்கோல் போரின் கீழே ஒரு பகுதியில் திடீர் என்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. வைக்கோல் போர் முழுவதும் வேகமாக தீ பரவி எரிய தொடங்கியது. தனபால் குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்கள் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டுகளை தனித்தனியாக பிரித்து தீயை முற்றிலும் அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் போர் எரிந்து நாசமானது.மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது
Related Tags :
Next Story