மதுரையில் மாவோயிஸ்டு கைது
மதுரையில் மாவோயிஸ்டு கைது
மதுரை,பிப்.
கேரளாவில் மாவோயிஸ்டு தலைவன் மணிவாசகர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கின்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொடா சுரேஷ் என்பவர் அரசுக்கு எதிராகவும், அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அவர் உள்ளிட்ட பலர் மீது தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்டு விவேக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாவோயிஸ்டு பொடா சுரேசை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் மதுரையில் பதுங்கியிருப்பதாக சேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மதுரை போலீசார் உதவியுடன் பொடா சுரேசை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை சேலத்திற்கு அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் போலீசாருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாவோயிஸ்டு சுரேஷ், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story