3-வது நாளாக அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக அரசு டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
பெரம்பலூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் வேறுபாடின்றி காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அரசு சேவை டாக்டர்களுக்கு முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50 சதவீது இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு நியாயமான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந்தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த அரசு டாக்டர்கள் கோரிக்கை வாசங்கள் அடங்கிய அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 3-வது நாளான நேற்று அரசு டாக்டர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 28-ந்தேதி தேதி சென்னையில் அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story