மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
விருதுநகர்,
மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,639 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 79 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16,636 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16,379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 1,956 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை முடிவுகளையும், பரிசோதனை எண்ணிக்கையை தெரிவிப்பதிலும் தாமதம் செய்யும் நிலை உள்ளது.
Related Tags :
Next Story