திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை


திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2021 2:26 AM IST (Updated: 20 Feb 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர், 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு கம்பர் நகரை சேர்ந்தவர் சங்குசூடாமணி. இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூரை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகள் ராஜேஸ்வரிக்கும் (வயது 23) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ராஜேஸ்வரி கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் ஜன்னல் கம்பியில் ராஜேஸ்வரி, துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேஸ்வரி உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரிகிருஷ்ணன், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story