பல்வேறு நகரங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வாய்ப்பு
தென்னக ெரயில்வே நிர்வாகம் விருதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப வசதி செய்து உள்ளதாக ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,
தென்னக ெரயில்வே நிர்வாகம் விருதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சரக்குகளை அனுப்ப வசதி செய்து உள்ளதாக ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுமதி
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
விருதுநகர் ெரயில் நிலையத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயில், மைசூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களும், ராஜபாளையம் ெரயில் நிலையத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலும், சாத்தூர் ெரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ெரயிலும், கோவில்பட்டி ெரயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ெரயிலும், ஒட்டன்சத்திரம் ெரயில் நிலையத்தில் சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயிலும் 5 நிமிடங்கள் நின்று செல்ல தென்னக ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வாய்ப்பு
இதனால் விருதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து வீட்டு உபயோக பொருட்கள், வணிகஉற்பத்தி பொருட்கள், விவசாய விளைபொருட்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் மும்பை, பெங்களூரு மைசூரு, புதுடெல்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதம் விருதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து அதிக சரக்குகள் பல்வேறு ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
எனவே தொழில் முனைவோரும், வணிகர்களும், விவசாயிகளும் பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விருதுநகரிலிருந்து தாங்கள்அனுப்ப வேண்டிய சரக்குகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து பயன் பெறுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story