சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு விருது


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு விருது
x
தினத்தந்தி 20 Feb 2021 3:02 AM IST (Updated: 20 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு விருது

திருச்சி, 

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்பான முறையில் விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து பூங்காவில் நேற்று நடைபெற்றது. போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் கலந்து கொண்டு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், நாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர் ஷேக்அப்துல்லா உள்பட பலருக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் விக்னேஸ்வரன், முருகேசன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story