கிணற்றில் விழுந்த காளைகள் மீட்பு


கிணற்றில் விழுந்த காளைகள் மீட்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 3:02 AM IST (Updated: 20 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் விழுந்த காளைகள் மீட்பு

மணப்பாறை, 
மணப்பாறையை அடுத்த செவலூர் பகுதியில் இரு வேறு இடங்களில் உள்ள இருவேறு கிணறுகளில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் தனி தனியே தவறி விழுந்தன. சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இருந்ததால் அதில் காளைகள் நீந்திக்கொண்டு இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடும் போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி 2 காளைகளையும் பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story