கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காரைக்கால் வருகை
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காரைக்கால் வருகை தருகிறார்
புதுச்சேரியின் புதிய கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் பொறுப்பெற்றுக்கொண்டார். இவர் புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு இன்று (சனிக்கிழமை) வருகை தருகிறார். கவர்னர் மாளிகையில் இருந்து காரில் வரும் கவர்னர் காலை 10.30 மணியளவில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று, கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்கிறார். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் 11.30 மணியளவில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து 12.30 மணிக்கு மதிய உணவு சாப்பிடும் கவர்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 3.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
Related Tags :
Next Story