சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சரக டி.ஐ.ஜி.


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சரக டி.ஐ.ஜி.
x
தினத்தந்தி 20 Feb 2021 5:40 AM IST (Updated: 20 Feb 2021 5:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டனர். அதைத்தொடர்ந்து போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story