திருவண்ணாமலை்; குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி
திருவண்ணணாமலை தியாகி அண்ணாமலை நகரில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் தியாகி அண்ணாமலை நகர் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் நகராட்சி மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 6 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
இதை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை நகராட்சிக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீருக்காக அருகில் உள்ள தெருக்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய்களை தூர்வாரவும், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story