ஆரணி; பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


ஆரணி; பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 Feb 2021 5:56 PM IST (Updated: 20 Feb 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆரணி

ஆரணி தாலுகாவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார். 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவியும், களம்பூர் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் மணிகண்டபிரபு (20) என்பவரும் காதலித்து வந்ததும், மாணவியை கடத்தி மணிகண்டபிரபு வீட்டில் தங்க வைத்து இருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாணவியை கடத்தியதாக மணிகண்டபிரபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். 

Next Story