ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் குடும்ப நல ஓய்வூதிய நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்,
10 மாதமாக வழங்காத குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க முன்னாள் மாநில தலைவர் பொன்னையா முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஆண்டவர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சவுகத்அலி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story