வந்தவாசி; 10-ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது


வந்தவாசி; 10-ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2021 8:34 PM IST (Updated: 20 Feb 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

கிளினிக்கில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது வந்தவாசி லட்சுமி நகரை சேர்ந்த வேணுகோபால் (வயது 49) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அலோபதி கிளினிக் வைத்து நடத்துவது தெரியவந்தது.

போலி டாக்டர் கைது

இதனையடுத்து அதிகாரிகள் கிளினிக்கில் இருந்த ஊசி, மருந்து- மாத்திரைகளை பறிமுதல் செய்து கிளினிக்கிற்கு ‘சீல்’ வைத்தனர். 

இதுகுறித்து தெள்ளார் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு ெசய்து, வேணுகோபாலை கைது செய்தார். மேலும் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலி டாக்டர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story