வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒரேநாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 2 காதல் ேஜாடிகள் அடுத்தடுத்து தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
வடமதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 2 காதல் ேஜாடிகள் அடுத்தடுத்து தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி
அய்யலூர் அருகே உள்ள வளவிசெட்டிபட்டியை சேர்ந்த ரவி மகள் தனலட்சுமி (வயது 21). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். அய்யலூர் அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (22). இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தனலட்சுமியும், கணேசமூர்த்தியும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இவர்களின் காதல் விவகாரம், அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. மேலும் அவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் கடந்த 6-ந்தேதி தங்களது வீட்டை விட்டு வெளியேறி கேரள மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே தனலட்சுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடி, நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கணேசமூர்த்தியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால், மணமக்களை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசில் தஞ்சம்
இதேபோல் வடமதுரை அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்தவர் தனபாலன் (22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அதே மையத்தில் திருச்சியை சேர்ந்த சொர்ணா (21) என்பவரும் படித்து வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் இவர்களின் காதலுக்கு சொர்ணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி, தங்களது வீட்டைவிட்டு வெளியேறி நேற்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காதலர்கள் 2 பேரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ அனுப்பி வைத்தனர்.
வடமதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 2 காதல் ஜோடிகள் அடுத்தடுத்து தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story