தனுஷ்கோடியில் இளைஞர்கள் ஆபத்தான குளியல்


தனுஷ்கோடியில் இளைஞர்கள் ஆபத்தான குளியல்
x
தினத்தந்தி 20 Feb 2021 9:17 PM IST (Updated: 20 Feb 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான நிலையில் கடலில் இறங்கி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

ராமேசுவரம், 
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான நிலையில் கடலில் இறங்கி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
தனுஷ்கோடி

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி. ராமேசுவரம் கோவிலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் தினமும் கார், வேன், ஆட்டோ, அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்று கடல் மற்றும் கடற்கரை அழகையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
 தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் அலைகள் வேகமாக உள்ள பகுதியாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுஉள்ளது. 
இவ்வாறு அரிச்சல்முனை செல்லும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடலை பார்க்கும் ஒரு ஆர்வத்தில் கடலின் ஆழத்தை அறியாமல் நீண்ட தூரம் வரையிலும் கடலில் இறங்கி நடந்து சென்று குளித்து வரும் நிலை தொடர்ந்து வருகிறது. போலீசார் கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்தும் அதைக்கேட்காமல் இளைஞர்கள் பலர் தொடர்ந்து குளிக்கின்றனர். 
தடுப்பு கம்பிகள்

எனவே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்கி சென்று குளிக்காமல் இருக்கும் வகையில் அரிச்சல்முனை சாலையை சுற்றி தடுப்பு கம்பிகளை அமைத்து அங்கு கூடுதலாக எச்சரிக்கை பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story