மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர்கள் மோதல்
மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
மூங்கில்துறைப்பட்டு
சங்கராபுரம் பகுதியில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு 2 டிராக்டர்கள் மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தன. மூங்கில்துறைப்பட்டு மைக்கேல்புரம் ஓடை அருகே வந்தபோது 2 டிராக்டர்களும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது அவை ஒன்றோடொன்று மோதியது. இதில் டிராக்டர்களில் இருந்த கரும்புகள் சரிந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் விபத்தில் சிக்கிய டிராக்டர்கள் மற்றும் கரும்புகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story