திருவண்ணாமலை; உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல்
திருவண்ணாமலை அருகே உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்ேவறு பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உரிய இழப்பீடுகள் வழங்காமல் விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவருக்கு சொந்தமாக பாலானந்தல் கூட்ரோடு பகுதியில் விளை நிலம் உள்ளது.
இந்த நிலையில் ஏழுமலையின் நிலத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இழப்பீடு தொகை வழங்காமல் தங்கள் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்று ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் பொருட்களை இறக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இருப்பினும் கோபுரம் அமைப்பதற்கான பொருட்களை இறக்க முயற்சி செய்து உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை குடும்பத்தை ஒரு பெண் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு உயர்மின் கோபுரத்தின் மீது ஏறினர்.
இதனையடுத்து அவர்களிடம் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசார் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது உயர்மின் கோபுரம் அமைக்கும் நிலத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு பின்பு பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஏழுமலை குடும்பத்தினர் உயர்மின் கோபுரத்தில் இருந்து இறங்கி வந்தனர்.
இதையடுத்து பணி நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story