வேளாளர் சமூகத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்


வேளாளர் சமூகத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 9:35 PM IST (Updated: 20 Feb 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் வேளாளர் சமூகத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்


உத்தமபாளையம்:

வேளாளர் சமூக பெயரை மாற்று சமூகத்துக்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பதாக கூறி வேளாளர் சமூகத்தினர் நேற்று முதல் உத்தமபாளையம் தெற்கு ரதவீதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதில் வேளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா மற்றும் தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள வேளாளர் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். 


போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 
---

Next Story