563 போலீசார் அதிரடி இடமாற்றம்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி: 563 போலீசார் அதிரடி இடமாற்றம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
தேனி:
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பிறப்பித்துள்ளார்.
அதுபோல் விருப்ப மாறுதல் கேட்டு மனு அளித்த போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் உள்பட மொத்தம் 563 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் பணியாற்றும் போலீஸ் நிலையத்தில் இருந்து தங்களை விடுவித்து மாற்றம் செய்யப்பட்ட பணியிடத்தில் உடனடியாக சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story