விழுப்புரத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி
விழுப்புரத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் பயணிகள் ரெயிலையும் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி ரெயில் நிலையங்களை தயார்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்தின் உத்தரவின்படி விழுப்புரம் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் தற்போது ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எலக்ட்ரிக்கல், சிக்னல், பேக்கேஜிங் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி, திருச்சி மார்க்கங்கள் பிரியும் இடத்தில் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பழைய ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை அகற்றிவிட்டு புதியதாக ஜல்லிக்கற்கள், மண் ஆகியவற்றை கொட்டினர். மேலும் தண்டவாளங்களில் ஆயில் மற்றும் கிரீஸ் பூசும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story