ஒகேனக்கல் அருகே சாலையை கடந்த யானைகள் கூட்டம் வாகன ஓட்டிகள் பீதி
சாலையை கடந்த யானைகள் கூட்டம்
பென்னாகரம்:
ஒகேனக்கல் அருகே சாலையை கடந்த யானைகள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
யானைகள் அட்டகாசம்
கர்நாடக வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிக்குள் நுழைந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அஞ்செட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் அடிக்கடி வெளியே வந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்து செல்கின்றன.
வாகன ஓட்டிகள் பீதி
இதன் காரணமாக யானைகள் கூட்டம் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. நேற்று முன்தினம் ஒகேனக்கல் முண்டச்சிபள்ளம் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே தங்களது வாகனங்களை நிறுத்தினர். யானைகள் சென்ற பின்னர் அவர்கள் மீண்டும் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story