தூத்துக்குடியில் காரில் கடத்திய 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
தூத்துக்குடியில் காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடியில் காரில் கடத்தப்பட்ட 20 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
2 பேர் கைது
அப்போது அந்த காரில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காரில் இருந்த தூத்துக்குடி பி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த ராஜா (வயது 38), கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த கணேசன் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் வழங்கினர்.
Related Tags :
Next Story